பத்தினி வேஷம் போடாதன்னு திட்றாங்க.. மனம் நொந்து பேசிய நடிகை இலக்கியா!!

121

இலக்கியா…

டிக் டாக் ஆப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இலக்கியா. கிளாமர் லுக்கில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்த இலக்கியா சினிமாவி, வாய்ப்பு தேடி அலைந்தது குறித்து சமீபகாலமாக பேசியிருந்தார். நடிகை ஷகீலாவுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்த இலக்கியா, சமையல் செய்து கொண்டே பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் தனியாக இருப்பேன், நண்பர்கள் வருவார்கள் போவார்கள், தனியாக இருக்கும் போது பல விஷயங்களை நினைத்து கவலைப்பட்டு அழுதிருக்கிறேன். ஆனால் நான் கடந்து வந்த வாழ்க்கை எனக்கு பல விஷயங்களை சொல்லி கொடுத்துவிட்டதால், இப்போது எல்லாத்தையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டது. பெரிதாக எதற்கும் அழுவதில்லை, கவலைப்படுவதில்லை.

எது நடந்தாலும் பார்க்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார். மேலும் பேசிய இலக்கியா, ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன், ஆனால் தோல்வியாகி போதும்டா சாமி, இருப்பதை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஒரு பாடலுக்கு சோலோவாக நடனமாடியிருக்கிறேன்.

குக்குங் சேனல் துவங்கி இருப்பதை மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. 8 வயதில் இருந்து சமையல் செய்து வருகிறேன், ரொம்பவும் பிடித்தமான ஒரு விஷயம். அதனால் தான் கவர்ச்சியை காட்டாமல் இப்படியே மாறிவிடலாம் என்று கவர்ச்சி வீடியோக்களை போடுவதில்லை.

இதற்கு சிலர் இனிமே காட்ட மாட்டியா? என்றும் பத்தினியா மாறிட்டியா? சும்மா பத்தினி வேஷம் போடாதே என்றும் கமெண்ட் செய்கிரார்கள். கவர்ச்சியா வீடியோ போட்டாலும் திட்டுறாங்க, சமையல் வீடியோ போட்டலாலும் திட்டுறாங்க என்று இலக்கிய பகிர்ந்துள்ளார்.