பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல நடிகரின் மகளால் பரபரப்பு!!

1177

வனிதா

பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட நடிகரான விஜய குமாருக்கும், அவருடைய மூத்த மகளான வனிதாவிற்கும் நீண்ட வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜயகுமார் தரப்பில் பரபரப்பான புகார் மனு ஒன்று மதுரவாயல் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது.
அதில், மதுரவாயில் அருகே ஆலப்பாகத்தில் உள்ள என்னுடைய வீடு ஒன்றை நடிகையும் எனது மகளுமான வனிதாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு கொடுத்தேன்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யாமல் இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை காலி செய்து தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களிடம் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.