பல நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட செவிலியர் வழக்கில் திருப்பம்!!

657

வழக்கில் திருப்பம்

ஒடிசா மாநிலத்தில் செவிலியர் ம ர்மமாக இ றந்து கிடந்த வழக்கில், முக்கிய குற்றவாளி தாமாகவே பொலிஸில் சரணமடைந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்த நிஹாரிகா பத்ரா என்கிற இளம்பெண் கடந்த 9ம் திகதியன்று திடீரென மாயமாகியிருந்தார்.

இதுகுறித்து அவருடய தாய், காதலன் ராஜாவுடன் மகள் ஓடிப்போயிருக்கலாம் என கூறியிருந்தார். இதனால் பொலிஸாரும் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க, 17ம் திகதியன்று சாக்கில் அடைக்கப்பட்டிருந்த செவிலியரின் ச டலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், நிஹாரிகாவின் இரத்த பரிசோதனைகளை கொண்டு சந்தேகத்தின் பேரில் 6 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நிஹாரிகாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே மாயமாகியிருந்த காதலன் ராஜா இன்று பொலிஸ் நிலையத்தில் தாமாகவே வந்து சரணடைந்துள்ளார். இதனால் கொ லை வழக்கில் இன்னும் நிறைய உண்மைகள் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.