பல பெண்களுடன் தொடர்பு.. கொடூரமாக கொல்லப்பட்ட ஆசிரியர் : அதிர்ச்சிப் பின்னணி!!

780

கொடூரமாக கொல்லப்பட்ட ஆசிரியர்

தமிழகத்தில் ஆசிரியர் கொலை வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனத்தை சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார், கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி கொல்லப்பட்டார்.

அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் அகிலன் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் பல பெண்கள் உடனான தொடர்பு குறித்த தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பொலிசார் தேடி வந்த நிலையில் அகிலன் உள்பட ஐந்து பேரையும் ஓராண்டுக்கு பின்னர் தற்போது கைது செய்தனர். இதனிடையில் குற்றவாளிகள் இருவரிடம் பொலிசார் விசாரணை நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.