பல வருடங்கள் காணாமல் போன நடிகை சிவரஞ்சனிக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா : ஆச்சர்யப்படுத்திய புகைப்படம்!!

1118

நடிகை சிவரஞ்சனி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிவரஞ்சனி. கமல், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தவர் கடந்த 20 வருடமாக சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். பலவருடங்களாக எங்கிருக்கிறார் என தெரியாமல் இருந்தநிலையில் தற்போது தான் இவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி இவர் கூறுகையில், கடந்த 1997ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் திருமணம் நடந்தது. தற்போதுவரை ஆந்திராவில் தான் வசிக்கிறேன். இதன்பின் வந்த பல சினிமா, சின்னத்திரை வாய்ப்புகளை நிராகரத்துவிட்டேன்.

எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே குடும்பத்துடனே சந்தோஷமாக இருக்கிறேன். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமாபிரபலங்களின் 90s யூனியனில் தான் பலரும் என்னை பார்த்து சர்ப்ரைஸ் ஆகிட்டாங்க என்று கூறியுள்ளார்.

என்னுடைய பெரிய பையன் ரோஷன் ஒரு படத்தில் நடிச்சுட்டான். பொண்ணு மேதாவுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம். `நான் சினிமா ஸ்டார் ஆகப்போறேன்’னு கடைக்குட்டி ரோஹன் இப்போதே முடிவுப் பண்ணிட்டான்” என மகிழ்ச்சிப்பொங்க கூறியுள்ளார்.