பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!!

272

தருமபுரி…

தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் அடுத்த பூமாண்டஹள்ளி ஊராட்சி சென்றாம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38). இவருக்கும் அதே பகுதியில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த பள்ளி மாணவிக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடந்தது.

இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் வந்ததையடுத்து திருமணம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர்.

அதற்குள் மாணவிக்கும், வாலிபருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து மாணவியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் காரிமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் செய்துகொண்ட மாணவி 18 வயதை கடந்துவிட்டாரா? அந்த மாணவியின் சம்மதத்தின்பேரில் திருமணம் நடந்ததா என்ற கோணத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18 ஆக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அதனை 21 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்து அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.