பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போதைய இளைஞர்களின் பேவரெட். தினமும் அதைப்பற்றி தான் எல்லோரும் பேசுகிறார்கள் என்று உறுதியாக கூறலாம்.நிகழ்ச்சி ஆரம்பித்து 16 போட்டியாளர்களில் இருந்து மமதி சாரி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரம் மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம் என 5 பேர் நாமினேஷனில் உள்ளனர்.
இதில் யார் வெளியேறுவார் என்பது மக்களுக்கு இதுவரை தெரியாது. இந்த நேரத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் மும்தாஜ் தான் வெளியேறுவார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் பக்கத்தில் விசாரித்ததில் மும்தாஜ் என்று தான் கிசுகிசுக்கின்றனர். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாளை வரை பொறுத்திருந்து தெரிந்துகொள்வோம்.