இயக்குனர் சுசிகணேசன்
பிரபல இயக்குனரான சுசிகணேசன் மனைவி மஞ்சரி சுசிகணேசன் என கணவர் மீது லீனா மணிமேகலை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர், பல பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அந்த வகையில் பெண் இயக்குனரான லீனா மணிமேகலை என்பவர், சுசிகணேசன் தன்னிடம் காரில் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு இயக்குநர் சுசி கணேசன் மறுப்பு தெரிவித்ததோடு, லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் லீனா மணிமேகலை தரப்பில் இருந்து தொடர்ந்து இயக்குநர் சுசிகணேசன் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் சுசிகணேசன் மனைவி மஞ்சரி சுசிகணேசன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் என் கணவருக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இது லீனா மணிமேகலையின் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் கற்பனையான குற்றச்சாட்டு ஆகும்.
எங்களுக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நாட்களில் அவர் ஒரு கணவராக, குழந்தைக்கு அப்பாவாக, சக மனிதர்களை மதிக்கும் கொள்கையும் தன்மையும் கொண்டவர்.
நான் வலுவாக #Metoo இயக்கத்தை ஆதரிக்கிறேன். ஆனால் எதிர்பாரதவிதமாக லீனா போன்ற சிலபேர் எந்தவித உண்மைத்தன்மை மற்றும் ஆதாரமும் இல்லாமல் இதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
என் கணவர் மீதான குற்றச்சாட்டை ஒரு மனைவியாக சட்டபூர்வமாக எதிர்க்கொண்டு லீனா மணிமேகலையின் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வெளிசத்துக்கு கொண்டுவருவேன்.
இவரின் பொய்யான குற்றச்சாட்டால், எங்களுக்கு, பெற்றோருக்கு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ப்பட்ட மான உளைச்சலுக்கு லீனா மணிமேகலை பதில் சொல்லி ஆகவேண்டும். உண்மை தான் எப்போதும் வெற்றியடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.