பிரபல நடிகர் கேரளத்திற்கு செய்த நிதியுதவி! எவ்வளவு இலட்சம் தெரியுமா?

733

நடிகர் விஜய் கேரள மக்களுக்காக நிதியுதவி அளித்துள்ளார்.நடிகர் விஜய் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளா வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் இன்னும் ஏன் விஜய் நிதி உதவி அளிக்கவில்லை என பலரும் பேசிவந்தனர்.

இந்நிலையில் தற்போது விஜய் 70 லட்சம் ருபாய் நிதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தமிழ் நடிகர்களில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா முழுவதும் உள்ள அவரது ரசிகர் மன்றங்களுக்கு 3 முதல் 5 லட்சம் ருபாய் வரை விஜய் நிவாரண பணிகளுக்காக வழங்கியுள்ளார். மொத்த தொகை 70 லட்சத்தை விட அதிகம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.