பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் சரிகமப அர்ச்சனாவுக்கு இத்தனை கஷ்டங்களா??

970

ராக்ஸ்டார் ரமணியம்மா பாடிய சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனாவை மறக்க முடியாது. கமெண்ட் அடிப்பது, ஆடுவது, பாடுவது என பலரையும் ஈர்த்துவிட்டார்.

டிவியில் பலவிதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் இவர் முன்பு இளமை புதுமை, காமெடி டைம் என முக்கிய நிகழ்ச்சியில் தனது திறமையை காட்டினார். ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

அவருக்கு பிரியமான அவரின் அப்பா 2000 ம் ஆண்டில் இறந்துவிட அர்ச்சனாவுக்கு சவால் தொடங்கியுள்ளது. பின் சேனல்களில் தலை காட்டியவர் 2004 ல் திருமணம் செய்தார். தற்போது சாரா என்ற மகளும் இருக்கிறாராம்.

மற்றவர்களை மகிழ வைப்பதற்காக போட்டிக்கு நடுவிலும் தன்னை நகைச்சுவை பெர்ஃபார்மராக மாற்றிக்கொள்ள வேண்டுயிருக்கிறது என்கிறார் அர்ச்சனா.

கேலி, கிண்டல்கள், தான் நடந்துகொள்ளும் விதம் பற்றி விமர்சனங்கள் என கருத்து தாக்குதல்களை சந்தித்து பொறுமையாக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்ல நிச்சயம் நமக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் இவரை தற்போது நல்ல இடத்தில் வைத்துள்ளதாம்.

இதற்காக அவர் 18 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறாராம்.