தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், மூத்த நாடக நடிகருமான ஏ. ஜெயராமன் நேற்றிரவு சென்னையில் காலமானார்.
அவரது வயது 84, ஜம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடக நடிகராக வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தவர்.உடல்நலக்குறைவால் தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவரது உடலுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், துணை தலைவர் கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, சங்கீதா, பசுபதி, விக்னேஷ், ஹேமச்சந்திரன் ஸ்ரீமன், ஏ.எல்.உதயா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.