பிரித்தானியாவில் பிரிந்து சென்ற சென்ற மனைவியை பழிவாங்க நினைத்து கணவன் செய்த மோசமான செயலுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசித்து வரும் Adrian Wilks என்ற 45 வயதான நபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி Irina-வை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
தனது மனைவியை பழி வாங்க நினைத்த Adrian, Irina புகைப்படத்தினை கொண்ட போலியான முகப்புத்தக கணக்கை தூங்கி அதன் மூலம், தனது மனைவியை துஸ்பிரயோகம் செய்ய ஆண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அந்த கணக்கில் Irina-வின் கார் எண் மற்றும் அவர் வேலை பார்க்கும் முகவரி உள்ளிட்டவைகளை குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் போலியான கணக்கில் தன்னுடைய புகைப்படம் வருவதை நண்பர் ஒருவரின் மூலம் தெரிந்துகொண்ட Irina காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் Adrian-ஐ கைது செய்தனர்.
இந்த நிலையில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளி Adrian-க்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்