பிரியாணிக்காக ஹொட்டல் உரிமையாளரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்: அதிர்ச்சி சம்பவம்!!

549

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு தட்டு பிரியாணியை ரூ.190க்கு விற்ற ஹொட்டல் உரிமையாளரை, வாடிக்கையாளர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தட்டு பிரியாணியை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார் சஞ்சய் மண்டல். 4 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பிரியாணிக்கு பணம் கொடுக்க சென்றுள்ளனர். அப்போது இந்த விலை ரொம்பவே அதிகம் என்று சஞ்சய் மண்டலுடன் அந்த நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரு தரப்புக்கும் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அப்போது, நண்பர் கூட்டத்தில் ஒருவர் தன்னிடமிருந்த கை துப்பாக்கியால் திடீரென சஞ்சய் மண்டலை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நால்வரும் தப்பியோடியுள்ளனர்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக சஞ்சய் மண்டலை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சஞ்சய் மண்டல் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தியதில், முகமது பைரோஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவருடன் அன்று பிரியாணி சாப்பிட்டு தகராறு செய்த பிற நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.