பீகாரில் 100 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : ஏராளமானோர் மாயம்..!! தேடும் பணி தீவிரம்!!

322

பீகார்…………….

பீகார் மாநிலம் கங்கை ஆற்றில் 100 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.

பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா பகுதியில் உள்ள கங்கை நதியில் 100 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மிதந்து வருகின்றனர். இதில், சிலர் மீட்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சுமார் 40 பயணிகள் செல்ல வேண்டிய படகில், இரண்டு மடங்கு பயணிகளை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.