புயல் நின்ற பின் கடலில் குவியலாக கரையொதுங்கும் மட்டிகள்-மூட்டைகளாக கட்டி விற்பனை செய்யும் மக்கள் கூட்டம்..!

407

மட்டி………

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருவானது.அப்புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் காரணமாக சென்னையில் கடலோரப்பகுதிகளிலும் கற்று பலமாக வீசியது.

இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த நிலையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டை கிராமக் கடற்கரைப் பகுதியில் ஏராளமான அளவுக்கு மட்டிகள் குவிந்தன.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மட்டி கிடக்கும் கடற்கரைப் பகுதிக்குச் சென்று சாக்கு மூட்டைகளிலும், பைகளிலும் அள்ளிச் சென்றனர். பெண்கள் பலர் நடந்தே சென்று பைகள் மற்றும் கூடைகளில் மட்டியை அள்ளிச் சென்றனர்.

இந்த

மட்டி மருத்துவக் குணம் கொண்டது என கூறப்படுகிறது.இது குறித்து கருது கூறிய அப்பகுதி மீனவர்கள் கடந்த 3 நாட்களாகக் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காற்றும், மழையும் பெய்ததால் கடலில் இருந்து மட்டிகள் கரை ஒதுங்கியுள்ளன என கூறியுள்ளனர்.