புற்றுநோயால் இரண்டு மார்பகத்தையும் இழந்து தவித்த பெண்ணின் இன்றைய நிலை!!

1028

இரண்டு மார்பகத்தையும் இழந்து தவித்த பெண்

44 வயது பெண் ஒருவர் புற்றுநோய் காரணமாக தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் நீக்கிய நிலையில் தற்போது அவர் தான் சந்தித்த துன்பம் அதிலிருந்து மீண்டது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Carla Mills.தற்போது 44 வயதாகும் இவர் தன்னுடைய 38 வயதில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன்.

இதனால் மார்பக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் சரியாக வேலை செய்ய முடியாது, ஒரு பெண் என்ற உணர்வே வாரது என்று முதலில் தயங்கினேன், பயந்தேன்.

அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து அதே 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் திகதி மார்பக அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தேன். அறுவை சிகிச்சையும், நடந்தது. அப்போது மருத்துவர்கள் ஒரு புறம் மட்டும் செய்தால் போதும் என்றார்கள், நான் ஒன்றை மட்டும் செய்தால் எப்படி என்று இரண்டு பக்கமும் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

அதிலிருந்து மீண்டு வந்த நான் மீண்டும் மார்பகம் வைத்து கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தேன். அப்போது அதற்கான முறைகளை கேட்ட போது கொஞ்சம் பயம் இருந்தது.

அதற்கான முயற்சியில் இறங்கினேன், ஆனால் அதில் பலன் அளிக்கவில்லை, இதற்காக நான் பல முறை அழுததுண்டு என்று கூறியுள்ளார். மேலும் நம்பிக்கை மூலம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் இவர், தற்போது நான்காவது கட்டத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.