செல்லப்பிராணியாக தாம் வளர்த்து வந்த பூனையை கணவர் அடித்ததால் சினமடைந்த மனைவி, தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விபரீத சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமையே இச் சம்பவம் இடம்பெற்றது.
மேரி ஹரிஸன் (47 வயது) என்ற பெண்ணே இவ்வாறு பூனையை அடித்ததற்காக தனது கணவரான டெக்ஸ்டரை (47 வயது) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
தாம் வளர்த்து வந்த பூனையை தனது கணவர் அடித்ததாகவும் அதனால் சினமடைந்த தான் அவருடன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் விவாதம் உச்ச கட்டமடைந்த தருணத்தில் சினத்தைக் கட்டுப்படுத்த முடியாத தான் தனது கணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் மேரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து டெக்ஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.