பெரியம்மாவை பார்க்க சென்ற வாலிபர் : வழியிலேயே நடந்த விபரீதம்!!

348

நீலகிரி…

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பீச்சனகொல்லி பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாபுவின் பெரியம்மா உயிரிழந்ததால் விடுமுறை எடுத்துவிட்டு கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இவர் ஊட்டியிலிருந்து கூடலூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர் பஜார் அணைக்கட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.