பொய்யான பாலியல் புகார் : சின்மயி மன்னிப்பு கூட கேட்கவில்லை : கல்யாண் மாஸ்டர் ஆதங்கம்!!

653

கல்யாண் மாஸ்டர்

மீடூ மூலம் என் மீது தவறாக பழிசுமத்தப்பட்ட விவகாரத்தில் சின்மயி என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என கல்யாண் மாஸ்டர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த பெண் கல்யாண் மாஸ்டர் தவறாக நடக்க முற்பட்டார் என கூறியதை சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில்பதிவிட்டிருந்தார். ஆனால், அப்பெண் விளையாட்டாக கூறியதை உண்மை என சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் இதை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய கல்யாண் மாஸ்டர், அந்த பெண் விளையாட்டாக கூறியதாக கூறிவிட்டார். ஆனால் அதை பரபரப்பாக்கிய சின்மயி அது சம்பந்தமாக என்னிடம் சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை. மேலும், இப்படி சின்மயி நடந்துகொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.