மகனாக பார்த்தோம் உன்னை….இப்படி சீரழித்துவிட்டாயே : ஒரு தாயின் கதறல்!!

764

சென்னையில் மகனாக பார்த்த நபர் தங்கள் மகளின் வாழ்க்கையை சீரழித்ததை தாங்கிகொள்ள முடியாத தாய் கண்ணீர் சிந்தியுள்ளார்.

மாரியம்மாள் என்பவரின் மகள் மகள் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துவருகிறார்.

மாரியம்மாள், வீட்டு வேலை செய்கிறார். அவரின் கணவர், அந்தப் பகுதியில் உள்ள புதிதாகக் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றுகிறார்.

மாரியம்மாளின் கணவர் வேலைபார்க்கும் இடத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் எலெக்ட்ரீஷியனாக வேலைபார்த்தார். இதனால் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.

26 வயதாகும் ராஜசேகருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில், அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கடி சென்றுள்ளார் அந்தச் சிறுமி. அப்போது ராஜசேகருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்குச் சென்றுள்ளார் ராஜசேகர். இருவரும் நெருங்கிப் பழகினர். இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

ஆனால், அந்தத் தகவலை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. 5 மாதங்கள் கடந்ததால், அவரின் உடலில் மாற்றம் தெரிந்தது. அதைக் கவனித்த மாரியம்மாள், மகளிடம் விசாரித்தார். முதலில் எந்தத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, கர்ப்பமாக இருக்கும் தகவலை சிறுமி தெரிவித்தார்.

அதைக் கேட்ட மாரியம்மாள், அவரின் கணவர் அதிர்ச்சியடைந்தனர். மகளின் கர்ப்பத்துக்கு ராஜசேகர்தான் காரணம் என்ற தகவலைக் கேட்டு மாரியம்மாளும் அவரின் கணவரும் ஆத்திரமடைந்தனர்.

`மகன் போலதான் அவனைக் கருதினோம். ஆனால், அவன் என் மகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டானே’ என்று இருவரும் கதறினர். இதையடுத்து மாரியம்மாள், அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் கர்ப்பத்துக்கு ராஜசேகர்தான் காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜசேகரை பொலிசார் கைதுசெய்தனர்.