
மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியாற்றி வந்தார்.
முக்தாரின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததால், விடுப்பு எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு முக்தாரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து, அதற்கு வீரர்கள் பலியாகின்றனர், கடந்த மாதமும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது