மகன் வயது இளைஞருடன் திருமணமான பெண்ணுக்கு காதல் : நேர்ந்த விபரீத சம்பவம்!!

618

இந்தியாவின் பெங்களூரில் மகன் வயது இளைஞருடன் கள்ளக்காதலில் இருந்த பெண், தடையாக இருந்த கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ் ஷெட்டி (56) என்பவர் தனது மனைவி அன்னபூர்னா (46) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அன்னபூர்னாவுக்கு பிரகாஷ் (26) என்ற மாணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த சந்தோஷ், மனைவியுடன் தொடர்பை கைவிடுமாறு கூறி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். நேற்று இரவு இது குறித்து மீண்டும் சந்தோஷுக்கும், அன்னபூர்னாவுக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அன்னபூர்னா கணவர் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து தனியறையில் வைத்து பூட்டியுள்ளார்.

பின்னர் பிரகாஷுக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார்.
இதையடுத்து இருவரும் சேர்ந்து சந்தோஷை கட்டையால் அடித்துள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் பிரகாஷையும், அன்னபூர்னாவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.