மகள் இந்த காரியத்தை செய்திருப்பாளோ.. பயத்தில் இருந்த மொத்த குடும்பமும் எடுத்த விபரீத முடிவு!!

1174

பெங்களூர்..

பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா (69), இவர் மனைவி சரோஜா (55), மகன் மனோஜ் (25), மகள் அர்ச்சனா (28). அர்ச்சனாவை காணவில்லை என ஸ்ரீராமப்பா சமீபத்தில் பொலிசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ள அவருடன் வீட்டை விட்டு ஓடி போயிருக்கலாம் என குடும்பத்தார் பயந்துள்ளனர்.

இந்த பயம் மற்றும் விரக்தியில் மூவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இறப்பதற்கு முன்னர் எழுதியிருந்த தற்கொலை கடிதத்தில் அர்ச்சனா தான் தங்கள் மரணத்திற்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. பொலிசார் கூறுகையில்,

இளைஞர் ஒருவருடன் அர்ச்சனா மூன்றாண்டுகளாக காதலில் இருந்துள்ளார். அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்று வருகிறோம், விசாரணைக்கு பின்னரே முழு தகவல்கள் வெளிவரும் என கூறியுள்ளார்.