மதுபோதையில் தகராறு செய்து வந்த கணவன் : முடிவு கட்டிவிட்டு மனைவி செய்த செயல்!!

1480

தமிழக மாவட்டம்……

தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மனைவி ஷோபனாவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சீராளன், தனது மனைவியை தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஷோபனா, சீராளனின் தலையில் கல்லை போட்டு தாக்கியுள்ளார்.

மேலும் கடப்பாரையால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சீராளன் உயிரிழந்தார். அதன் பின்னர் சோபனா திருவள்ளூர் மப்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.