மனநலம் குன்றிய மகளுக்கு பாலியல் தொல்லை : நெஞ்சை உருக்கிய நிகழ்வு!!

643

தனது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் தாய் ஒருவர் மகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

வால்பாறை முடிஸ் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தவல்லி. இவர் கணவர் மற்றும் மனநலம் குன்றிய மகளுடன் கெஜமுடிஸ் பகுதியில் வசித்து வந்தார். வேலைக்கு செல்லும் முருகானந்தவள்ளி வீட்டில் தனியாக மகளை விட்டு விட்டு செல்லும் வழக்கம் வைத்திருக்கிறார்.

கடந்த மாதம் ஒருநாள் அப்படி வேலைக்கு சென்ற பின் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் இவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். மகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து மகளை மீட்டுள்ளனர்.

இதற்கு பின் இந்த விடயம் தொடர்பாக பொலிஸிடம் புகார் அளித்திருக்கிறார் முருகானந்தவள்ளி . காவல்துறையினர் மூக்கன் மீது வழக்கு பதிவு செய்து 1000 ரூபாய் அபாரதத்தோடு மூக்கனை வெளியே விட்டு விட்டது.

அதற்கு பின் ஆட்சியர் அலுவலகத்திலும் இது குறித்து புகார் எழுப்பியும் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த முருகானந்தவள்ளி பாதிக்கப்பட்ட தன் மகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க மண்ணெண்ணையுடன் வந்திருக்கிறார்.

அவரை சோதனை செய்தபோது மண்ணெணெய்யை பறிமுதல் செய்தனர். அதன்பின் நடந்த விவரங்களை கூறிய முருகானந்தவள்ளி தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு போக போவதில்லை என தங்கள் துணிகளோடு ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளார்.