மனைவி, குழந்தைகளை உயிரோடு கொளுத்தி விட்டு நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி தெரியுமா?

1103

தமிழ்நாட்டின் சேலத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும் பூவரசன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். குடிக்கு அடிமையான கார்த்திக் கடந்த 19-ஆம் திகதி பூமதி குழந்தைகளுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை காப்பாற்றச் சென்ற தனக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதை தற்கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று காலை பூமதி மற்றும் அவர் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதி, தன்னையும் குழந்தைகளையும் கணவர் கார்த்திக் தான் மதுபோதையில் தீவைத்து எரித்ததாக அவரது சகோதரரிடம் கூறியுள்ளார். இதை மரணவாக்குமூலமாக பதிவு செய்த பொலிசார் கார்த்திக்கை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், சம்பவதன்று போதையில் வந்த கார்த்திக் பூமதியை தனிமையில் அழைத்த நிலையில் குழந்தைகள் இருப்பதால் அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மூவரும் தூங்கிய பிறகு மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்துள்ளது.