மனைவி மற்றும் மகனை குண்டு வைத்து கொல்ல முயன்ற கணவன்: நேர்ந்த துயர சம்பவம்!!

554

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மனைவி மற்றும் மகனை குண்டு வைத்து கொல்ல முயற்சித்த நபர், அதே வெடிகுண்டில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் உள்ள Pueto Boyaca பகுதியில் குடியிருந்துவரும் John Gonzalez Anzola என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஜான் கோன்சலசின் மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கோன்சலஸ், தமது மனைவியை பழிவாங்க திட்டமிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று மனைவி தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சென்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், எந்த காரணம் கொண்டும் விவாகரத்து தர முடியாது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த களேபரத்தினிடையே ஜான் கோன்சலசின் மாமியார் பொலிசாருக்கு தகவல் தெரிவிப்பேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற ஜான் கோன்சலஸ், திரும்பி வந்து தமது மனைவியையும் மகனையும் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் கவலையடைந்த Maria Cecilia தமது மகளையும், பேரப்பிள்ளையையும் வேறு இடத்திற்கு மாற்றியதுடன், தாம் குடியிருப்பில் இருந்து அனைத்து பரபரப்பும் அடங்கிய உடன் வந்து கூப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நள்ளிரவு தாண்டிய நேரம் வெடிகுண்டுடன் திரும்பிய கோன்சலஸ், படுக்கை அறையில் தமது மனைவி தான் படுத்திருப்பதாக கருதி வெடிகுண்டை வீசியுள்ளார்.

ஆனால் வெடிகுண்டானது கோன்சலசின் அருகாமையிலேயே வெடித்துள்ளது. இதில் கோன்சலஸ் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கொன்சாலஸின் மாமியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.