மருமகளுக்காக கருவை சுமந்த மாமியார்… மகனுக்காக பேத்தியை பெற்றெடுத்தார் : உலக அளவில் வைரலான 56 வயது பெண்மணி!!

1290

அமெரிக்கா….

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வசித்து வரும் ஜெப் ஹாக் (Jeff Hauck ) மற்றும் அவரது மனைவி cambriairene இருவருக்குமான குழந்தையை தான், ஜெப் ஹாக்கின் தாயார் தற்போது பெற்றெடுத்துள்ளார். ஆம், ஜெப் ஹாக்கின் மனைவிக்கு கர்ப்பப் பையில் பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றி இருக்கின்றனர்.

இதன் காரணமாக குழந்தைப் பேறு அடைய முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டதாகவும் இந்த நிலையில்தான், அவரது மாமியார், அதாவது ஜெப் ஹாக்கின் தாயாரான நான்சி ஹாக் ( Nancy Hauck, 56), ஒரு அதிரடி முடிவை எடுத்தார். ஆம், அதுதான் வாடகைத் தாயாக இருந்து மகனுக்கான குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுக்கும் நவீன மருத்துவ மகப்பேறு முறை. அண்மைக் காலங்களில் தமிழகத்தில் இதுகுறித்த தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.

அப்படித்தான், வாடகைத்தாய் மூலம் மகனுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க நான்சி ஹாக் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, வாடகைத்தாயாக இருந்த நான்சி ஹாக், தனது மகன், மருமகளுக்காக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் cambriairene உருக்கமாக பகிர்ந்திருக்கிறார்.

அத்துடன் தங்களது இந்த பெண் குழந்தைக்கு ஹன்னா ( Hannah) என்று பெயர் சூட்டிய ஜெப் ஹாக் , வாடகைத்தாயாக இருந்து தங்களது குழந்தையை பெற்று கொடுத்த தமது தாயாரை கௌரவப் படுத்தும் விதமாக இந்த பெயரை சூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நான்சி ஹாக், வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய மருத்துவர் ரஸ்சல் பவுல்க் இதுகுறித்து கூறுகையில், இது மாறானது தான் என்றும், அதே சமயம் குழந்தை பெற்றுக்கொள்வதை கட்டுப்படுத்தும் காரணியாக வயது இல்லை என்றும், இது தனி நபரின் உடல் ஆரோக்கியம் சார்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.