மிக பிரம்மாண்டமாக நடக்கிறது அம்பானி மகளின் நிச்சயதார்த்தம் : எந்த நாட்டில் தெரியுமா?

1040

நிச்சயதார்த்தம்

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிராமலுக்கும் இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஆகாஷின் நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள இவர்களது ஆண்டலியா இல்லத்தில் யூன் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாவது மகள் இஷாவின் நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடைபெறவுள்ளது.

வரும் 23ம் திகதி வரை இந்தத் திருமண நிகழ்ச்சிகள் விருந்து, விஷேசங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தாலியில் உள்ள லேக்கோமோ என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில், இந்த நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளது.

இதில் விருந்தினர்களுக்குப் பிரம்மாண்டமான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு விருந்தில் நடன நிகழ்ச்சிகள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் இத்தாலியில் உள்ள லேக்கோமோ உள்ள வில்லா பால்பினோவில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது