முகேஷ் அம்பானி

நாட்டின் மிகப்பெரிய செல்வந்தரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவருமான முகேஷ் அம்பானி கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பார்க்லேஸ் ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி 3 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து 7வது ஆண்டாக முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடங்களில் இருக்கும் எஸ்.பி.ஹிந்துஜா மற்றும் குடும்பத்தினர் லட்சுமி மிட்டல், அசிம் பிரேம்ஜி ஆகிய 3 பேரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பை காட்டிலும் முகேஷ் அம்பானியின் சொத்து அதிகமாக இருக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 617 ஆக இருந்த நிலையில் தற்போது 831 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் முகேஷ் அம்பானி தன் மகள் இஷா அம்பானிக்கு இத்தாலியில் உள்ள நட்சத்திர விடுதியில் மிக பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.