முகேஷ் அம்பானி…
முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா தனது மருமகள் ஷோல்கா மேத்தாவுக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள பொருளை பரிசாக கொடுத்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளவர் முகேஷ் அம்பானி. இவர் மகன் ஆகாஷ் அம்பானிக்கு கடந்த 2019ல் ஷோல்கா மேத்தா என்ற் பெண்ணுடன் திருமணம் நடந்தது.
அந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி மும்பையில் மிக பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஷோல்காவுக்கு அவரின் மாமியாரான நீட்டா கொடுத்த பரிசு தொடர்பான தகவல் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
அதன்படி மருமகளுக்கு நீட்டா ரூ. 300 கோடி மதிப்பிலான பரிசை கொடுத்தார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! அது தான் உண்மை.. ரூ 300 கோடி மதிப்புள்ள வைர நகை தொகுப்பை தான் நீட்டா ஷோல்காவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.
L’Incomparable’ என்ற வைர நகைகள் தொகுப்பை தான் நீட்டா கொடுத்தார். உலகின் மிக விலையுயர்ந்த வைர நெக்லஸ் என கின்னஸ் புத்தகத்தில் L’Incomparable இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.