முதியவர்கள் கணக்கில் இருந்து நூதன முறையில் ஏடிஎம்களில் பணம் எடுத்து வந்த 24 வயது இளம் பெண் : சிக்கியது எப்படி?

518

தேனி……

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொண்ண மாணிக்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமேகலை (24). இவர் ஏடிஎம் மையத்திற்கு வருகை தரும் வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி முதலில் அவர்களுடைய ரகசிய எண்களை பெற்றுக்கொள்வார்.

பின்பு பணம் வரவில்லை என்று சொல்லி அடுத்த ஏடிஎம் இயந்திரத்தில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதோடு இவர் வைத்திருக்கும் போலி ஏடிஎம் அடையாள அட்டையை கொடுத்து விடுவார் பின்பு அவர்களின் ஏடிஎம் அடையாள அட்டையை வைத்து முழு பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.

இவர் மீது கிட்டத்தட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்றைய முதல் நாள் மதுரை மாநகர் உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் இரண்டு இடங்களிலும் அதேபோல தல்லாகுளம் எல்லைக்குட்பட்ட ஒரு ஏடிஎம் மையத்தில் வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி,

அவர்களின் ரகசிய எண்களை தெரிந்து வைத்துக்கொண்டு பின்பு இவர் மறைத்து வைத்திருக்கும் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு அவர்கள் சென்ற அடுத்த நிமிடத்தில் அவர்களின் உண்மையான ஏடிஎம் அடையாள அட்டையை எடுத்து பணம் எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் மற்றும் தல்லாகுளத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மணிமேகலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்