முத்தங்களை பறக்கவிட்டு அரசியல் குறித்து பேசிய நடிகை நமீதா!!

962

ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை நமீதா பறக்கும் முத்தம் கொடுத்து ரசிர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

திறப்பு விழாவிற்கு நமீதா வருவதை அறிந்து ரசிகர்கள் அங்கு ஆர்வத்துடன் கூடினர். நடிகை நமீதாவுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி அவர் பறக்கும் முத்தம் கொடுத்தார். ரசிகர்கள் அதனை ஒன்ஸ்மோர் கேட்டு வாங்கினர்.

மேலும், தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் சரியில்லாததால் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.