
முன்னாள் கணவனை உ ளவு பார்ப்பதற்காக, தங்கள் மகளின் பொம்மைக்குள் குரலை பதிவு செய்யும் கருவி ஒன்றை மறைத்து வைத்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசித்துவரும் Dominic Bamfordம் Heather Bamford (33)ம் முன்னாள் தம்பதி. அவர்கள் பிரிந்த பின், ஒரு நாள் தந்தையை பார்ப்பதற்காக மகளை அனுப்பியிருக்கிறார் Heather.
வீட்டுக்கு வந்த குழந்தையிடம் இருந்த பொம்மையை வாங்கிய Dominic அதை அழுத்தி பார்த்துள்ளார். அது அழுத்தினால் பேசும் பொம்மை. ஆனால், அழுத்தினால் பேசுவதற்கு பதில், பொம்மையிலிருந்து மகளின் குரல் கேட்க, குழப்பமடைந்துள்ளார் Dominic.
மீண்டும் அதை அவர் அழுத்த, பொம்மையிலிருந்து தன்னுடைய குரலும் கேட்க, அந்த பொம்மைக்குள் குரலை பதிவு செய்யும் கருவி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக அவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். முன்னாள் கணவனை உளவு பார்ப்பதற்காக, பொம்மைக்குள் குரலை பதிவு செய்யும் கருவி ஒன்றை மறைத்து வைத்ததற்காக, பொலிசார் Heatherஐ கைது செய்துள்ளனர்.
அவர் மீது, ஒட்டுக்கேட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.