மூத்த திரைப்பட நடிகர் காலமானார்!!

617

மூத்த திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராய் டி சில்வா தனது 80-வது வயதில் மரணமடைந்துள்ளார்.இலங்கை திரைப்பட துறையில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்த ராய் 60 திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், 30-க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த 1964-ஆம் ஆண்டு பி. நீலகண்டன் இயக்கத்தில் சுஜகே ரஹசா என்ற திரைப்படம் மூலம் ராய் நடிகராக திரையுலகுக்கு அறிமுகமானார்.

ராய் இயக்கிய திரைப்படங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான திரைப்படங்கள் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது.