மூன்று பச்சிளம் குழந்தைகளை கொன்ற தாய் : விசாரணையில் சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உறவினர்கள்!!

372

ஆந்திர…..

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் வசிக்கும் பொண்டா லட்சுமி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது .அதனால்  அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்தார்.

ஏனெனில் அந்த லட்சுமிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு அந்த இரண்டு பெண் குழந்தைகளையும் கொலை செய்து வீசி விட்டார்.

அடுத்து மூன்றாவதாவும் பெண் குழந்தை பிறந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை  கேள்விப்பட்டு அந்த பகுதி சுகாதார பணியாளர் ஸ்வப்னா என்பவர் சிகிச்சையளிக்க அந்த வீட்டுக்கு வந்தார்.

அப்போது அந்த லட்சுமி தன்னுடைய புதிதாக பிறந்த பெண் குழந்தை இறந்து விட்டதாக கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார் .

பின்னர் அந்த லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் விசாரணை நடத்தியபோது அவர் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு புதிதாக பிறந்த பெண் குழந்தையை கொன்று விட்டதாக கூறினார்.

பிறகு  அந்த பெண் மீது அவர் போலீசில்  தகவல் கூறியதும் ,அங்கு வந்த போலீசார் தனக்கு பிறந்த மூன்று பெண்  குழந்தைகளை கொன்ற அந்த லட்சுமியை கைது செய்தனர்