அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த மகனை காப்பாற்ற தாய் ஒருவர் போராடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரூம்பா பானர்ஜி. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு அரீன் சக்ரவர்த்தி என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 14-ஆம் திகதி இவர்களின் வீடு திடீரென்று தீ விபத்தில் சேதமடைந்தது.
அப்போது வீடு எரிவதைக் கண்ட அரீன் சக்ரவர்த்தி நெருப்பின் பிரம்மிப்பை கண்டு அதை நெருங்கி போனதால் புகை அவரது உடம்பிற்குள் பரவிச்சென்றது. இதனால் சிறுவனது உறுப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே ஆடிசம் நோயால் பாதிக்கப்பட்ட சக்ரவர்த்தி, இதன் காரணமாக மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், இதனால் சிறுவனை காப்பாற்றுவது கடினம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் தற்போது மகனை உயிர் காக்கும் கருவிகளுடன், உயிருடன் வைத்திருக்க வேண்டி தாய் ரூம்பா, பிடல்பியா மருத்துவமனை மருத்துவர்களுடன் போராடி வருகிறார்.
இவரது போராட்டம் இரண்டு மாத காலமாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.