ரகசியமாக அந்தரங்க வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்த இளம் பெண் : பின் நேர்ந்த விபரீதம்!!

1212

ஒடிசா…..

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை அவர்களுடன் இருந்த போது ரகசியமாக எடுத்து வைத்து மிரட்டி வந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரின் உதவியுடன் இந்த செயலை அவர் செய்து வந்தது அம்பலம் ஆகியிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் திரைப்பட தயாரிப்பாளர் அக்சயா பரிஜா. இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பின்னர் அக்சயா பரிஜா இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது, தயாரிப்பாளர் அக்சயா பரிஜா, அர்ச்சனா என்ற பெண் மூன்று கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார்.

அர்ச்சனா மீது மற்றொரு பெண்ணும் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது அந்தரங்க படங்களை காட்டி மிரட்டுவதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அர்ச்சனா குறித்து விசாரணையில் இறங்கிய போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என்று பிரபலமானவர்களை குறி வைத்து அவர்களுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அவர்களுடன் தனியாக அறையிலிருந்த போது அவற்றை ரகசியமாக வீடியோக்கள் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் .

இந்த வீடியோக்களை பின்னால் அவர்களிடமே காட்டி பணம் பறித்து வந்திருக்கிறார். இந்த குற்றங்கள் அனைத்திற்கும் அவரது கணவர் உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து போலீசார் அர்ச்சனாவே புவனேஸ்வரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைதின்போது வீட்டில் இருந்த நாலு செல்போன்கள், இரண்டு லேப்டாப்கள், பென்டிரைவ் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஆய்வு செய்த போது பல முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் சிக்கி இருக்கின்றன .

ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா கட்சி தலைவர்கள், பாஜக கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அர்ச்சனாவின் வலையில் சிக்கியிருந்தது தெரிய வந்திருக்கிறது.