ரத்தம் சொட்ட கிழிந்த ஆடையுடன் 9 வயதுச் சிறுமி : கழிப்பறைக்கு சென்றபோது நேர்ந்த பயங்கரம்!!

722

இந்தியாவின் டெல்லியில் சிறுநீர் கழிக்க கழிப்பறைக்கு சென்ற 9 வயது சிறுமியை சிலர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசண்ட் குஞ்ச் பகுதியில் கடை வைத்திருக்கும் நபரின் 9 வயது மகள் நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு கடையில் தந்தைக்கு உதவியாக இருந்த சிறுமி பொது கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

அந்த இடத்தில் இருந்த சில மர்ம நபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்னர் உடலில் இரத்தம் சொட்ட கிழந்த உடையுடன் அழுது கொண்டே சிறுமி வந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் நடந்தவற்றை சிறுமி கூறிய பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சில ஆண்களை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.