லாட்ஜில் அறை எடுத்து காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இளைஞர் துடி துடித்து உயிரிழப்பு : போலீஸ் தீவிர விசாரணை!!

466

ஊக்க மாத்திரை….

காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட இளைஞர் துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் விசாரணையில் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்காக ஊக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் அந்த இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காதலிக்கும் போதே பலர் உடலுறவில் ஈடுபடும் சம்பவங்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற நேரங்களில் அவர்கள் பல சிக்கல்களில் அகப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இப்படியான ஒரு சிக்கல் காதல் ஜோடிக்கு ஏற்பட்டுள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காதலன் லாட்ஜில் அறை எடுத்து காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட போது உயிரிழந்த துயரம் தான் அது.

முழு விவரம் பின்வருமாறு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அஜய் பார்டேகி (25) வெல்டிங் டெக்னிசியன் ஆக பணிபுரிந்து வந்தார். மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாடாவைச் சேர்ந்த செவிலியரான (23) வயது பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்தது. இருவரும் பேஸ்புக்கில் பழகி வந்த நிலையில் காதலர்களாக மாறினர். இந்நிலையில் அஜய் பார்டேகியும் பெண்ணின் தாயாரை சந்தித்து தங்களது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.

பின்னர் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் உல்லாசம் அனுபவிக்க விரும்பினார், எனவே அஜய் பார்டேகி தனது காதலியை அழைத்து கொண்டு நாக்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

அப்போது இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். அப்போது திடீரென காதலன் துடி துடித்து சரிந்து விழுந்தார். இதைக் கண்டு ஒன்றும் புரியாத காதலி லாட்ஜ் அறையில் இருந்து அலறினார், உடனே அங்கு வந்த லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மயங்கி கிடந்தா இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இளைஞன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சயோனர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர், இதனையடுத்து காதலன் காதலியுடன் நீண்ட நேரம் உல்லாசத்தில் ஈடுபட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாகவும், அதன் விளைவாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் காதலனின் உள்ளுறுப்பு மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர் டாக்டர் ஆனந்த் சஞ்செட்டி, உடலுறவின் போது மாரடைப்பு அரிதானது ஆனால் சாத்தியமானது.

கண்டறியப்படாத கரோனரி தமனி நோய் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும், தற்காலத்தில் இளைஞர்களிடம் அதிக அளவிற்கு மாரடைப்பு காணப்படுகிறது, யாருக்காவது அறியப்படாத கரோனரி தமனி நோய் இருந்தால் உடலுறவு போன்ற நேரங்களில் அவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிச்சயம் இருதய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.