லிபியாவின் கடலில் இன்று ஒரே நாளில் கவிழ்ந்த இரு படகுகள்: 94 அகதிகளுக்கு நேர்ந்த சோ கம்!

472

லிபியாவின்…………

லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் இடம்பெற்ற இரு படகு விபத்துக்களில் 94 குடியேற்றவாசிகள் உ யிரிழந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் ச ட்டவி ரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கில் பெண்கள் மற்றும் கு ழந் தைகள் உட்பட 120க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று வி ப த் துக்குள்ளாகியுள்ளது.

மோ ச மா ன வானிலை காரணமாக ஏற்பட்ட குறித்த வி ப த் தில் படகு கவிழ்ந்து 74 குடியேற்றவாசிகளை பரிதாபமாக உ யிரிழந்தனர்.

இதே போன்று 50க்கும் அதிகமான குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட மற்றுமொறு படகு, தலைநகர் திரிபோலில் இருந்து வடகிழக்கு பதியில் அமைந்துள்ள சோர்மன் என்ற நகரின் கரையில் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் நடுக்கடலில் க விழ்ந்து வி பத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20 பேர் உ யிரிழந்துள்ளதுடன் எஞ்சியோர் அப்பகுதி மீனவர்களால் மீ ட்கப்பட்டுள்ளனர். வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீ ழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் இருந்து தப்பித்து உ யிரை பா துகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி ச ட்ட வி ரோதமாக கடல் ஆ பத்தான பயணம் மேற்கொள்கின்றனர்

எனினும் இந்த ஆண்டு இதுவரை, மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றனர் 800 க்கும் மேற்பட்டவர்கள் உ யி ரிழந்துள்ளனர். மேலும் 72,669 பேர் வெ ற்றிகரமாக கடலை கடந்து சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.