வட்ஸ் அப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான இலங்கை தமிழ் மாணவன்!!

1075

நக்கீரன் மகிழினியன்..

வட்ஸ் அப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ்.

மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும்,

இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார்.

மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.