வயிற்று வலியால் துடித்த 17 வயது பள்ளி மாணவி : மருத்துவமனை பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

928

காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் வயிற்று வலியால் துடித்த பள்ளி மாணவிக்கு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவையை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவி நேற்று வீட்டில் இருந்த நிலையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த மாணவியை அவர் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு, மற்றும் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் கர்ப்பத்துக்கு காரணமான நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.