அமெரிக்காவில் வளர்ப்பு மகனுடன் தாய்க்கு தகாத உறவு இருந்த நிலையில் தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்லா விண்டர்பீல்ட் என்ற பெண் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் தன்னிடம் படித்த மாணவன் ஒருவரை வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுத்துள்ளார்.
இந்நிலையில் வளர்ப்பு பிள்ளையுடன் கர்லாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.சில காலம் இந்த உறவு தொடர்ந்து வந்த நிலையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதையடுத்து 18 வயதுக்கு கீழான சிறுவனுடன் உறவு வைத்து கொண்டதாக கூறி பொலிசார் கர்லாவை கைது செய்துள்ளனர்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒத்து கொண்டுள்ளார்.கர்லாவிடம் அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணை யூன் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த வழக்கில் கர்லாவுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $40,000 அபராதமும் விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.