வவுனியாவில் வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா!!

364

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் வவுனியா வடக்கு மக்களின் கலை, கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் நாட்டிய நாடகங்கள், நடனங்கள், பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள், கலைஞர் கௌரவிப்பு, விவாதச் சமர் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன், வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் ச.தணிகாசலம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார், மாணவர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.