வாகனம் நிறுத்தும் தகராறில் ஓட்டுனரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பெண்!

545

டெல்லி அருகே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆட்டோ ஓட்டுனரை நோக்கி பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி குர்கான் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கட்டாரி காலை 9 மணியளவில் தனது ஆட்டோவினை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சப்னா (35) என்பவர் திடீரென கட்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சப்னா திடீரென தனது வீட்டிற்கு சென்றுவிட்டு, கணவர் யூனிஸ் மற்றும் மற்றொரு நண்பரை அழைத்து வந்துள்ளார். அங்கு தனது நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கட்டாரியை, சப்னா தாக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் வாக்குவாதம் முற்றவே, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சப்னா துப்பாக்கி ஒன்றினை எடுத்து கட்டாரியின் நெற்றியினை குறிவைத்து சுட்டுள்ளார்.இதனை சுதாரித்துக்கொண்ட கட்டாரி தப்பிக்க முயற்சிக்கும்போது அவரது காதுப்பகுதியை தோட்டா பதம்பார்த்து விட்டு சென்றது.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் கட்டாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சப்னா மற்றும் அவரது மனைவி யூனிஸை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த துப்பாக்கியினையும் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பான காணொளி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.