பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் இம்ரான் கான், தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்த இவர், 9 வருடத்துக்குப் பின் ஜெமிலாவை விவாகரத்துசெய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், தொலைக்காட்சி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார்.
10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்குவந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாவதாக ஆன்மிக ஆலோசகரான புஷ்ரா மேனகா என்பவரை இம்ரான் கான் மணந்தார்.
இந்நிலையில், இவர் மீது சமீபத்தில் இரண்டாவது மனைவி ரேஹாம் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இம்ரானின் இரண்டாவது மனைவியான ரெஹம் கான், தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்துக்கு, ‘ரெஹம் கான்’ என, தனது பெயரையே வைத்துள்ளார்.அதில், இம்ரான் கான் பற்றி, பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இம்ரான் கானுக்கு, போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாகவும், அதை சில நேரங்களில் நேரடியாக பார்த்துள்ளதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தனக்கு, முறை தவறி ஐந்து குழந்தைகள் பிறந்ததாக இம்ரான் கூறியதாகவும், அதில் சில குழந்தைகள் இந்தியப் பெண்களுக்கு பிறந்தவை என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இதுகுறித்து கூறிய இம்ரான், பொதுவாக இரண்டாவது திருமணம் குறித்தும், ரேஹாம் கான் குறித்தும் வெளியில் பெரிதாக பேசியது இல்லை. எனது வாழ்க்கையில் சில தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், நான் செய்த மிகப்பெரிய தவறு இரண்டாவதாக ரேஹாம் கானை திருமணம் செய்ததுதான் என்று கூறியுள்ளார்.
