விசுவாசம் படம் தீபாவளிக்கு இல்லை.. எப்போது வெளியாகும்? பிரபல திரையரங்கு உரிமையாளர் கூறிய தகவல்!!

779

தல அஜித் தற்போது நடித்துவரும் விசுவாசம் படத்தை சிவா இயக்கிவருகிறார். அதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்பே அறிவித்தது படக்குழு.

ஆனால் தற்போது படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.மேலும் விஜய்யின் சர்க்கார் மற்றும் சூர்யாவின் NGK ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

அதனால் விசுவாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளிவரும் என சென்னையின் பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ட்விட்டரில் கூறியுள்ளார்.