விபத்தில் சிக்கிய விமானத்தின் அருகே செல்பி எடுக்க ஓடிய இளைஞர்கள் : புகைப்படத்தால் ஆத்திரமான இணையவாசிகள்!!

536

செல்பி எடுக்க ஓடிய இளைஞர்கள்

விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் விமானத்தின் நிலை என்ன என்பதை அறியாமல் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியுள்ள சம்பவம் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வழக்கமான சோதனைக்காக புறப்பட்டு சென்றுள்ளது.

அப்போது விமானமானது விவசாய நிலம் ஒன்றில் மோதி விபத்துக்குள் ஆகியுள்ளது. இருப்பினும் விமானத்தில் இருந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளான தகவல் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவியதால், அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் கூடியுள்ளனர்.

கூடிய அவர்கள் விமானத்தின் நிலையை அறியாமல் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலம், செல்பி எடுத்துக் கொள்வதும், விபத்துக்குள்ளான விமானத்தை படம் பிடிப்பதுமாக இருந்தனர்

விபத்தில் சிக்கியுள்ள விமானம் என்ன நிலையில் உள்ளது? அது வெடித்து சிதறும் அபாயம் உள்ளதா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் விமானத்தின் அருகே இருந்து கொண்டு பல்வேறு நிலைகளில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதால், இணையவாசிகள் பலரும் கோபமாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.