வீடியோவை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கிய நடிகை ஸ்ரீரெட்டி!!

882

நடிகை ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் தன் வீட்டில் புகுந்து சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியன் ரகளை செய்ததாக போலிசில் புகார் அளித்திருந்தார். இந்த விசயம் சர்ச்சையானது.

மேலும் பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்டு கண்ணாடிகளை சுப்பிரமணியன் உடைத்ததோடு, தன்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்து ரகளை செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் போலிஸ் விசாரணையில் ஸ்ரீ ரெட்டி திட்டமிட்டே நடத்திய நாடகம் என கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்திருந்தார். மேலும் இப்போது வீட்டில் நடந்த விசயத்திற்கான ஆதாரமாக சிசிடிவி கேமிரா வீடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.